Share on
மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டட திறுப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மகா வித்தியாலய அதிபர் முஹீனா முஹ்ஸின் தலைமையில்
இன்று புதன் கிழமை கோலாகலமாக இடம்பெற்றது.
இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரிஸ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்த மூர்த்தி, மூதூர் மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிய வகுப்பறைக்கட்டடம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டதோடு கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அத்தோடு, ‘அந்-நஹார்’ அரையாண்டு செய்தி இதழும் விழாவில் வெளிடப்பட்டது.

0 comments :
Post a Comment