அட்டாளைச்சேனை பாலமுனைப் பகுதியில் இளம் குடும்ப பெண் தூக்கில் - மரணத்தில் சந்தேகம்

Share on

அம்பாறை மாவட்டம்-பாலமுனை கிராமத்தில் இளம் பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் .

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் இளம் குடும்பப் பெண் கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மாலை 13-12-2012  மாலை 04 மணிக்கு அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாது- தூக்கில் தொங்கிய பெண் பர்வின் வயது (26) சம்மாந்துறை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். இவர் சுமார் மூன்று மாதங்களாகவே அல்-ஹிதாயா பள்ளி வீதிஇ பாலமுனை- 01ம் பிரிவில் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொண்டு தனது நான்கு வயது மகனும்இ தாயாருடனும் வாழ்ந்து வந்ததாகவும்இ இவருடைய கணவன் றுமைஸ் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அவருடைய புதிய வீட்டு நிர்மான வேலையும் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் வேவைலையாட்கள் அங்கிருந்து வெளியாகும்  போது வீட்டில் இருந்து யாரும்  வெளிய வராததால்  பக்கத்து வீட்டில் இருந்து வந்த  பெண்  உள்ளே சென்று பார்த்தபோதே தூக்கில் தொங்கி இருக்கும் விடையம் அறிய முடிந்தது எனவும்இ அதனைத்தொடர்ந்து பொலிசார் அங்கு வந்து  நிர்மாண வேலை செய்தவர்களை விசாரணை செய்து மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி உரிய இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொலிசாரால் தகவல் கூறப்பட்டு இது வரை சடலம் எடுக்கப்பட வில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருவதுடன் சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

2 comments :

kamal said...

dear admin, check this post theirs some problem of u r link

impordnewss said...

நன்றி உங்கள் குறிப்பிடலுக்கு தற்பொழுது சரியாகி விட்டது...