ஒலுவில் துறைமுக நுளைவாயிலின் முன்னால் போராட்டம் (படங்கள்)







(படங்கள் :- TK.Rahmathullah, MF.Rifas)
பெரியளவிலான வள்ளங்களினால் ஆழ்கடலில் மீன்பிடித்துவரும் கடற்றொழிலாளர்களின் மீன்களை துறைமுக வாயிலூடாக கொண்டு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதனைக் கண்டித்து ஒலுவில் துறைமுகம் முன்பாக  ஆர்ப்பாட்டம் மற்றும் வீதயை மறித்து போராட்டம் நடத்தினர்.

இவ்விடயம் தொடர்பாக ஆழ்கடல் மீனவரொருவர் கருத்து தெரிவிக்கையில் -பெரியளவிலான வள்ளங்களினால் ஆழ்கடலில் மீன் பிடித்துவரும் கடற்றொழிலாளர்களின் வள்ளங்கள் சுமார் பதினாறு, 20 நாட்களின் பின்னர் வழமையாக ஒலுவில் துறைமுகத்தில் தரித்து நின்று தமது மீன்களை விற்பனை செய்து வந்தனர். ஆனால் வழமைக்கு மாறாக இன்று (14) வெள்ளிக்கிழமை துறைமுக அதிகாரிகளினால் உள்ளே செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் பத்து இலட்சம் பெறுமதியான மீன்களுடன்  பெரியளவிலான ஆழ்கடல் வள்ளங்கள்( டங்கிபோட்) கரையிலே தரித்து பிடிக்கப்பட்ட மீன்களுக்கு ஐஸ் இடுவதற்கான வசதியுமின்றி பாரிய நஷ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். மேலும் மாத்தறை மற்றும் தூர இடங்களிலிருந்து திருத்தவேலைகாரணமாக துறைமுகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள படகுகளை திருத்துவதற்கும அனுமதிமறுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்தில் ஏற்கனவே வெளிநாட்டு அதிகாரிகள் இருக்கும் போது தமக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், இன்னுமொரு மீனவர் தெரிவிக்கிறார்.
எனவே இதனைக் கண்டித்து அட்டாளைச்சேனைப் பிரதேச மற்றும் வெளியூர் 10 மீனவர்கள் மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில்,  உறுப்பினர்களான ஏ.எல்.அமானுள்ளா  ஏ.பாரின்,எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.முனாஃப், ஏ.எல்.சுபைதீன், ஆகியோர் பொதுமக்கள் இவ்வெதிர்ப்பு போராட்டத்ததில் ஈடுபட்டனர்.

இதேவேளை ஒலுவில் துறைமுகஅதிகாரசபையின் சிரேஷ்ட முகாமையாளர் யூ.எம். நஜீப் கருத்து தெரிவிக்கையில்- துறைமுக வேலைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது. தற்போது இன்னும் துறைமுக நடைமுறைகள் ஒழுங்கு படுத்தப்படவில்லை. அவ்வாறு ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்வதாயின் உயரதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே நாங்கள் செயற்படவேண்டியுள்ளது என்றார். எனினும் தற்போது பிடித்து வரப்பட்ட மீன்களை வெளியில் கொண்டு செல்வதற்காக நாங்கள் பேசியுள்ளோம் பதில் கிடைத்தவுடன் வழங்க முடியும் என்றார்.





இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :