இலங்கை பொப் பாடகியை தொந்தரவு செய்த தனியார் வானொலி ஊளியருக்கு கோட்டில் ஆஜராக உத்தவு!!

Share on
இலங்கையின் பொப் மற்றும் ஜாஸ் பாடகி உமாரியா சிங்கவன்ஸவுக்கு தொந்தரவு செய்வதாக கூறப்படும் தனியார் வானொலி நிறுவனமொன்றின் ஊழியரை டிசெம்பர் 14ஆம் திகதி கொழும்பு மன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வானொலி ஒன்றின் ஊழியரான ராம்சே ஜேனூர் என்பவருக்கே கொழும்பு கோட்டை நீதவான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

தான் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பங்குபற்றிய பின் தனது சினேகிதியான பாதியா ஜயகொடியுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போது சந்தேகநபர் தன் வழியை மறித்து கையை பிடித்து இழுத்ததாகவும் உமாரியா சிங்கவன்ஸ கொழும்பு கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சந்தேகநபர் பற்றி தான் முன்னரும் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவருக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கை கவனத்தில் எடுத்த நீதவான் கனிஷ்க விஜேரத்ன சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :