Share on

( எம்.ஐ.முஹம்மட் பைசல் )
தேசிய வாசிப்பு மாதத்தினைச் சிறப்பிக்கும் முகமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய 'விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா' எனும் தலைப்பிலான மூன்று நாட்களைக் கொண்ட கலை, கலைசார, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகள் கடந்த 25 ஆம் ஆகிய ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சையா க ஆரம்பாமானது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் இடம்பெற்ற கலை, கலைசார, பண்பாட்டு, பாரம்பரிய விழாவின் நிகழ்வுகள் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு பிரதான வீதியருகில் மசூர் சின்னலெப்பையின் திறந்த வெளியரங்கில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மூன்று நாட்களைக் கொண்ட விழா கடந்த 25, 26, 27 ஆம் திகதிகலில் பிற்பகல் 4.00 மணி முதல் நள்ளிரவு வரை இடம்பெற்றன.
மேற்படி விழாவின் ஆரம்ப நாள் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ்லும், இரண்டாம் நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமாரும், மூன்றாம் நாள் இறுதி நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர்கள் பிரதம அதிதியாகவும், கலாபூஷன் பாலமுனை பாறூக், ஆசிரிய ஆலோசகர் என். சம்சுடீன் உள்ளிட்டோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், உதவித் தவிசாளர், பாலமுனை இப்னு சீனா வித்தியாலய அதிபர் ஹமாமுடீன், அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலை அதிபர் ஏ.அப்துஸ் சலாம், பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், எஸ்.எல்.முனாஸ், ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன், ஏறாவூர் பிரதேச செயலாளர் எம்.ஹனீபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர்.ஏ.தெளபீக் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது, பாரம்பரிய விளையாட்டுக்களான கழிகம்பாட்டம், வாள்வீச்சு உள்ளிட்டவற்றுடன் வில்லுப் பாட்டு, நாட்டார் பாடல், கட்டுப் பாட்டு, ஹஸீதா, பேச்சு, கவிதை, விவாதம் இன்னும் பல நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. இப்போட்டி நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு அதிதி களால் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment