
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முறையான சேவைகளை வழங்காத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ‘நாட்டின் வீரர்கள் அமைப்பின்” மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் குடும்பத்தினர் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே ‘நாட்டின் வீரர்கள் அமைப்பு” ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அண்மைக்காலமாக முறையாக ஒப்பந்தங்கள் இன்றி பணியாளர்கள் அனுப்பப்படுவதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர் நோக்குகின்றனர். இதனால் சிலர் தமது வாழ்க்கையைக்கூட இழக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
இதேவேளை, வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்களுக்கு முறையான சேவைகளை வழங்காத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்வதற்கு மேற்படி அமைப்பினூடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்
0 comments :
Post a Comment