கல்முனையின் அபிவிருத்திக்கு பிரதேச அரசியல்வாதிகள் தடை எனக்கூறிய உலமா கட்சிக்கான கல்முனை மேயரின் பதில் சிறு பிள்ளைத்தனமாக உள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் காங்கிரசையோ அதன் தலைமையையோ விமர்சிக்கும் உரிமை உலமா கட்சிக்குக்கிடையாது என கல்முனை மேயர் கூறுவதன் மூலம் இவருக்கு இந்த நாட்டின் அரசியல் தெரியாது என்பது தெரிகிறது. ஓர் அரசியல் கட்சி என்பது சமூகத்துக்கான அரசியலை முன்னெடுக்கும் போது மாற்று அரசியல் கட்சியின் நடவடிக்கைகளில் பிழை கண்டால் அதனை விமர்சிக்கும் கடப்பாடு அதற்குண்டு. அரசியல் சாசனத்தில் அந்த உரிமை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எம்மைப்பொறுத்த வரை முஸ்லிம் சமூகத்தை யார் அரசியலின் பெயரால் ஏமாற்ற முயன்றாலும் அதற்கெதிராக குரல் கொடுப்போம்.
நாட்டில் உள்ள மாநகர சபைகளில் கல்முனை மாநகர அபிவிருத்தியே பின் தங்கியள்ளது என அவர் தனது பதிலில் மீண்டும் ஒப்பக்கொண்டுள்ளதால் அதைத்தான் நாமும் கூறுகின்றோம். கல்முனை மாநகரம் என்பது 1994ம் ஆண்டு அது பிரதேச சபையாக இருந்தது முதல் இன்று வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியிலேயே இருக்கிறது. ஆனாலும் இன்னமும் கல்முனை பின்தங்கியள்ளது என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் அதனை அபிவிருத்தி செய்ய முடியவில்லை என்பதே யதார்த்தம்.
மேயருக்கான எமது அறிக்கைக்குப்பின்னரே மு. கா தலைவர் கல்முனை அபிவிருத்தி சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசப்போவதாக மேயர்; கூறியுள்ளார். அதன் மூலம் எமது அறிக்கைக்கு பலாபலன் கிடைத்துள்ளது என்பதே அர்த்தமாகும். அதே வேளை ; இது வரை காலமும் இவரது தலைவர் எங்கே இருந்தார்.? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் 2000ம் ஆண்டு முதல் 2001 வரை அமைச்சராக இருந்தார். அதன் பின் 2001 முதல் 2003 வரை ஐ தே க ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அதன் பின் 2006 முதல் 2008 வரை அமைச்சராக இருந்தார். பின்னர் 2010 முதல் தற்போது வரை அமைச்சராக இருக்கிறார். இந்தக்கால எல்லைக்குள் எப்போதுமே கல்முனை அபிவிருத்தி பற்றி ஜனாதிபதிகளுடன் இவர் பேசவில்லை என்பதும் இனித்தான் அவர் பேசப்போகிறார் என்ற மேயரின் அறிக்கை மூலம் தெரிகிறது.
இன்றைய மேயர் அரசியலுக்கு வந்து ஒரேயொரு வருடமாவதால் அவருக்கு இந்த நாட்டு அரசியல் கட்சிகளின் வரலாறு தெரியாத காரணத்தாலேயே உலமா கட்சியில் அதன் தலைவர் மட்டுமே உள்ளார் என சிறு குழந்தை போல் கூறியுள்ளார். இது சிறு பிள்ளைகள் சண்டை பிடிக்கும் போது என் வீடு பெரியது உன் வீடு சிறியது என்ற கூறுவது போல் உள்ளது.
இந்த நாட்டின் வரலாற்றில் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நூற்றுக்கணக்கான மௌலவிகளை அலறி மாளிகைக்கு அழைத்துச்சென்று உலமா கட்சி வரலாறு படைத்தது. 2007ம் ஆண்டு கல்முனையில் மௌலவி ஆசிரிய நியமனத்தக்காக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் நூற்றுக்கணக்காக மௌலவிமாருடன் கட்சியின் தலைவர், செயலாளர், உப தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பற்றி சாய்ந்தமருது ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானா சுடர் ஒளி ஞாயிறு பதிப்பில் தனிப்பக்க கட்டுரையை படங்களுடன் எழுதியிருந்தார். அரசியலில் குழந்தையான மேயருக்கு இதுவெல்லாம் தெரியாததனால் கிணற்றுத்தவளை போன்று பேசியுள்ளார்.
ஆகவே முஸ்லிம் சமூகத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றும் காலமெல்லாம் அதனை விமர்சிக்க உலமா கட்சி ஒரு போதும் தயங்காது என்பதை ஆணித்தரமாக சொல்லி வைப்பதோடு இன்னும் ஒரு வருடத்துள் கல்முனையை அபிவிருத்தி செய்ய முடியாது போனால் கல்முனை மேயர் தனது மேயர் மற்றும் உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வாரா என்பதை நாம் ஒரு சவாலாகவே இங்கு தெரிவிக்கின்றோம்.
இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.

0 comments :
Post a Comment