நண்பர்களிடம் பந்தயம் கட்டி நிர்வாணமாக பைக் ஓட்டிய வாலிபர்

Share on
திருவனந்தபுரம்: நண்பர்களிடம் பந்தயம் கட்டி நிர்வாணமாக பைக் ஓட்டிய வாலிபர் ஒரு மணி நேர துரத்தலுக்கு பிறகு மடக்கி பிடிக்கப்பட்டார். நண்பர்களுடன் பந்தயம் கட்டி இப்படி நிர்வாணமாக பைக் ஓட்டியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளாவின் கோட்டயம் நகரில் உள்ள கேகே ரோட்டில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம். இதனால் எப்போதும் மக்கள் நெரிசலுடன் பரபரப்புடன் காணப்படும். இந்த சாலையில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் வாலிபர் ஒருவர் முழு நிர்வாணமாக பைக் ஓட்டி சென்றார். பெண்கள் அலறியடித்து ஓடினர். ஒரு சில வாலிபர்கள் தங்கள் பைக்குகளில் அந்த வாலிபரை துரத்தினர். ஆனால், அந்த நிர்வாண வாலிபர் பைக்கை வேகமாக ஓட்டினார். இதற்கிடையே, போலீசுக்கும் தகவல் பறந்தது. போலீசாரும், ஜீப் மற்றும் பைக்குகளில் துரத்த தொடங்கினர்.  சந்து பொந்துகளில் புகுந்து அந்த வாலிபர் போலீசை அலைய விட்டார். சுமார் ஒரு மணி நேர துரத்தலுக்கு பிறகு புறநகர் பகுதியை அந்த வாலிபர் அடைந்தார். அங்கிருந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், அதை ஒட்டி இருந்த தெருவழியாக அந்த வாலிபர் பைக்கை ஓட்டினார். ஆனால், குண்டும் குழியுமாக இருந்ததால் அவரை பொதுமக்களும், போலீசாரும் மடக்கி பிடித்தனர். அதற்குள் மொத்தம் 10 கி.மீ தூரம் நிர்வாணமாக பைக்கை அவர் ஓட்டி இருந்தார். அவருக்கு வேட்டி அணிவித்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தனது பெயர் கார்த்திக் (32). கோட்டயம் பனசிக்காடு பகுதியை சேர்ந்தவர் என்று கூறினார். சிறிது நேரத்தில் ஊரை மாற்றிக் கூறினார். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அவரது உண்மையான பெயர் கோபன் டி நாயர். முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டார். தொடர் விசாரணையில் போதைக்கு அடிமையானவர் என்று தெரிய வந்தது. 

தமிழ்நாடு தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :