Share on
ஜப்பான் நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது.அணு சக்தி நிலையங்களை மூடுதல், சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் அளிக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இதனால், ஆளும் கூட்டணியிலும் பிரச்சினை ஏற்பட

்டது. இதுவரை ஆறு பிரதமர்கள் மாற்றப்பட்டு விட்டனர். சமீப காலமாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே தீவு தொடர்பாக பகைமை வளர்ந்து வருகிறது.
இவ்விடயத்தில் உரிய தீர்வு காணாதது குறித்தும் பொருளாதார மேம்பாட்டுக்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது குறித்தும், ஆளும் கட்சி மீது புகார் கூறப்பட்டது.
நாளுக்கு நாள் பிரச்னை வலுத்து வந்ததால், ஜப்பான் பிரதமர் யோஷி ஹிகோ நோடா பார்லிமென்ட்டை கலைக்கப்போவதாக எச்சரித்தார்.
இதன் படி, நேற்று பாராளுமன்றத்தில் கீழ்சபை கலைக்கப்பட்டது. அடுத்த மாதம் 16ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.

0 comments :
Post a Comment