வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் அனைத்தும் களவாடப்பட்டுள்ளது.

Share on

வெலிக்கடைச் சிறைச்சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் அனைத்தும் சிறையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் பாதுகாப்பு படையினருக்கும் சிறைக்கைதிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலவரத்தின் போது இவ் நகைகள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாகவும்.

சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் அணிந்திருந்த தங்க நகைகள், அவர்களது சிறைக்காலம் முடியும் வரை சிறைச்சாலை நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு பாதுகாப்பான இரும்புப் பெட்டகத்தில் வைக்கப்படும்.

அவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகளே தற்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :