Share on
சாய்ந்தமருது-11 வீ.எச்.வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரமுகர் ஹிபதுல் கரீமின் வீடு மீது கைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் வீட்டின் முன்பக்க கதவு, ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. எனினும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹிபதுல் கரீம் கொழும்பில் தங்கியிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

0 comments :
Post a Comment