Share on
சர்வதேச அளவில் மிக முக்கியமாக தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டு வருகிறது.
அதன்படி, அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எப்பிஐ நேற்று வெளியிட்ட புது பட்டியலில், அமெரிக்காவின் அலபாமாவில் வசித்த ஓமர் ஷபீக் ஹமாமி என்பவரின் பெயரை சேர்த்துள்ளது.
இவர் சோமாலியாவில் பதுங்கியிருந்து அல்ஷபாப் என்ற இயக்கத்தின் தீவிரவாதிகளை இயக்கி வருவதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு பல வகைகளில் உதவியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பிலிப்பைன்சில் அமெரிக்கர் ஒருவரை கடந்த 93ம் ஆண்டு கடத்திய குற்றத்துக்காக, பிலிப்பைன்சை சேர்ந்த ஒருவரையும் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.இவர் உள்ளூர் தீவிரவாத இயக்கத்துக்கு தலைவராக செயல்படுவதாகவும் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஷேக் அமினுல்லா என்பவர் பாகிஸ்தானின் அல் கய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து சதி திட்டத்தில் ஈடுபடுவதாக இவர் பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவில் இவர் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்த்து புது பட்டியலில் 32 தீவிரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

0 comments :
Post a Comment