விபுலானந்தியன் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் சாந்தகுறோஸ் வெற்றிவாகை!



காரைதீவு சகா-
காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்த சனசமூக நிலையமும் இணைந்து “விபுலாநந்த விளையாட்டுக் கழகத்திலிருந்து உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக” நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சொறிக்கல்முனை சாந்தகுரோஸ் அணி வெற்றிவாகை சூடியது.

இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக (11) சனிக்கிழமை மாலை காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் Evergreen-Samanthurai அணியினரை எதிர்த்து
Santhacross-Sorikkalmunai அணியினர் மோதினர்.
இப்போட்டியில் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் Santhacross அணியினர் வெற்றியை தனதாக்கிக்கொண்டனர்.

கழகத்தலைவர் தம்பிராசா தவக்குமார் தலைமையில் நடைபெற்ற போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன.

காரைதீவின் முன்னாள் உதைபந்தாட்ட வீரரும் மட்டக்களப்பு சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருமான அருளானந்தம் கந்தராஜா பிரதம அதிதியாகவும் போசகர்களான வே.இராஜேந்திரன், வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கௌரவஅதிதிகளாகவும் கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தார்கள்.
இச்சுற்றில் தனது திறமையை வெளிக்காட்டிய வீரர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டதொடு வெற்றி பெற்ற சாந்தகுரோஸ் அணியினருக்கு பெறுமதி வாய்ந்த கேடயமும் 25ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

இச் சுற்றுப் போட்டிக்கு காரைதீவின் விளையாட்டு வீரர்களான அ.கந்தராஜா( லண்டன்) டாக்டர் அ.வரதராஜா( கனடா) ச.ஹரிகரராஜா(லண்டன்) ஆகியோர் அனுசரணை வழங்கினார்கள்.
இப்போட்டியானது வருடாவருடம் நடாத்தப்படும் எனவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

செயலாளர் எஸ்.கிருசாந்தன் நன்றியுரையாற்றினார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :