தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், இந்தியா தமிழ்நாடு, பெரியார் பல்கலைக்கழகத்துக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை!


ண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர்கல்வியினை சர்வதேச மயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் இந்தியா தமிழ்நாடு, பெரியார் பல்கலைக்கழகத்துக்குமிடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கடந்த (20)ஆம் திகதி உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.றியாட் ரூளியின் தலைமையில் உபவேந்தர் பேராசியர் றமீஸ் அபூபக்கர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உரையாற்றுகையில்;

புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறைகளில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இவ்வாறான ஒப்பந்தங்களின் ஊடாக விரிவுரையாளர்கள்-பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வு மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், , விரிவுரையாளர்களுக்கு பயிற்சிகள் உள்ளிட்ட பல ஒன்றினைந்த வேலைத் திட்டங்களை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

மிகவிரைவில் ரஷ்யா, துருக்கி, மலேசியா மற்றும் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் எதிர்வரும் காலங்களில் மேலும் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது போன்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :