முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் தொடர்பில் ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வின் கூற்று வரவேற்கத்தக்கது.!-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்



முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் நான் த‌லையீடு செய்ய‌மாட்டேன் என‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ கூறியிருப்ப‌தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ர‌வேற்றிருப்ப‌துட‌ன் இது ஏனைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் ந‌ல்ல‌தோர் எடுத்துக்காட்டு என‌வும் தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ள‌தாவ‌து,

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் எந்த‌வொரு திருத்த‌மும் கூடாது என‌ க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ எம‌து க‌ட்சி ம‌ட்டுமே வ‌லியுறுத்தி வ‌ருகிற‌து.

அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்த‌, இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ம் தெரியாத‌ சில‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் கூட‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த‌ வேண்டும் என்ற‌துட‌ன் அதில் த‌லையீடும் செய்து வ‌ந்துள்ள‌ நிலையில் ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வின் கூற்று பெரிதும் நிம்ம‌தியை த‌ருகிற‌து.

முன்னாள் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வும் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த‌ வேண்டும் என‌ த‌லையீடு செய்து அத‌ற்கென‌ ஒரு க‌மிச‌னையும் நிய‌மித்து அநியாய‌த்துக்கு அர‌ச‌ ப‌ண‌த்தை வீண‌டித்தார். க‌டைசியில் இறைவ‌னின் கோப‌ப்பார்வையில் சிக்கி சீர‌ழிந்தார்.

ஆனால் இன்றைய‌ ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் இது விட‌ய‌த்தை ந‌ன்கு புரிந்து இது விட‌ய‌த்தில் த‌லையீடு செய்ய‌மாட்டேன் என‌ கூறியுள்ள‌ தைரிய‌த்தை நாம் பாராட்டுவ‌துட‌ன் இந்த‌ க‌ருத்தை அமைச்ச‌ர் விஜேதாச‌ ராஜ‌ப‌க்ஷ‌ போன்ற‌வ‌ர்க‌ளும் ஏற்று முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்தும் தேவைய‌ற்ற‌ முய‌ற்சியை கைவிட‌ வேண்டும் என‌வும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :