சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஒடுக்கமான பாலம் ஆபத்தான நிலையில் !




நூருல் ஹுதா உமர்-
க்களின் பிரதான போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒடுக்கமான பாலம் பல தசாப்தங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்த நிலையில் பாவனைக்கு உகந்ததற்றதாக மாறியுள்ளதுடன் அந்த பாலத்தில் பயணிப்போர் அச்சத்துடனையே பயணித்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாலத்தின் ஊடாக சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி உப தபாலகம், கமு/ கமு/ றியாலுல் ஜன்னா வித்தியாலயம், தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா, பள்ளிவாசல், பாதுகாப்பு படை தளம், மீனவர்களின் தொழில் நிமிர்த்தமான பயணங்கள் என்பனவத்திற்கு செல்ல வேண்டும். அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல் வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் விருப்பமாகும்.

தொடர்ந்தும் இப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற மக்கள் பிரதிநிதிகள் இப்பிரச்சினைக்கு தீர்வை தருவதாக தேர்தல் காலங்களில் மேடைகளில் வாக்குறுதி வழங்கினாலும் கூட அது இன்னும் நிறைவேற்றப்பட வில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அதிகாரிகள் பலரும் பல்வேறு காரணங்களை கூறிவருகின்ற நிலையில் தமக்கான உச்சகட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க முன்வரவேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்களத்தினரை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :