வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.
குறித்த பாடசாலை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலிடம் பெற்றமைக்காகவே கல்வி வலயத்தால் பாடசாலையை கௌரவப்படுத்தி சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.