Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- news@importmirror.com Admin-message


Headlines
Loading...
Admin-message

இரசாயன உரத்தை தடை செய்ததாக கூறிய அரசாங்கம் அமோனியம் சல்பேற்றினை இறக்குமதி செய்ய முயற்சி: ஜே.வி.பிஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ரசாங்கம் டிசம்பரில் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் அமோனியம் சல்பேற்றினை இறக்குமதி செய்யவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ரசாயன உர பாவனையை தடை செய்வதாகக் கூறும் இவ் அரசாங்கம் எதற்காக இத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அவ்வாறெனில் அமோனியம் சல்பேற்றினையும் சேதன உரமாகவா வகைப்படுத்துகின்றனர் என்று JVPயின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்பினார்.

அத்தோடு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது நனோ நைட்ரஜன் என்று அரசாங்கம் கூறியமை உண்மைக்கு புறம்பானதாகும். அது நனோ யூரியாவாகும். இந்தியாவில் $3.22 ( சுமார் 725 ரூபாய் ) பெறுமதியுடைய இதன் விலை அமைச்சரவை பத்திரத்தில் $12.45 ( சுமார் 2,800 ரூபாய் ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த உர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுவதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லையிலுள்ள JVPயின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்:-

முறையான ஒழுங்கு விதிகளைப் பின்பற்றாமையின் காரணமாக சீன ரசாயன உரக் கப்பல் இன்னும் திரும்பிச் செல்லாமலுள்ளது. அரசாங்கத்தின் முட்டாள்தனமான செயற்பாடு காரணமாக தற்போது $8 Million ( சுமார் 180 கோடி ரூபா ) நஷ்டஈட்டினை குறித்த சீன உர நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த சீன உரத்தின் மாதிரி பரிசோதனை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

பிரதமரின் செயலாளருடைய உறவினர் ஒருவரே குறித்த சீன உர நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாகவுள்ளார் என்ற தகவல் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் அசமந்தமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறான அரசியல் காரணங்களுக்காக இந்த உரம் தொடர்பான பரிசோதனை அறிக்கையை எமது அரசாங்கம் நிராகரிக்குமாயின் இலங்கையின் உணவு ஏற்றுமதி, நாட்டின் நற்பெயர் உள்ளிட்ட அனைத்திற்கும் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படும்.

சீன உர பிரச்சினை காரணமாக இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது, ஆனால் அது நனோ நைட்ரஜன் அல்ல. நனோ யூரியாவாகும். இந்திய விவசாய உர கூட்டுத்தாபனப் பிரதிநிதி இலங்கையின் விவசாயத்துறை அமைச்சில் செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது உலகிற்கு புதியவொரு உரமாகும். விவசாயத்தின் போது பிரதானமாக பயன்படுத்தும் உரத்திற்கு மேலதிகமான பாவனைக்கே இந்த உரம் பயன்படுத் தப்படுகிறது.

இந்தியாவில் இவ் வருடம் June மாதமே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிற்கும் இது தொடர்பில் போதிய அனுபவம் கிடையாது. அத்தோடு இந்த உரத்தின் விலை (500 மில்லி லீற்றர்) $3.22 ( சுமார் 725 ரூபாய் ) ஆகும். ஆனால் இதனை இறக்குமதி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் இதன் விலை $12.45 ( சுமார் 2,800 ரூபாய் ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த உரத்தினை இறக்குமதி செய்வதற்கான $53 Million ( சுமார் 1,200 கோடி ரூபா ) கொடுக்கல் வாங்கலில் பாரிய சந்தேகம் நிலவுகிறது.

இதற்காக மக்கள் வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட பிரத்தியேக வங்கி கணக்கிற்கு அரசாங்கத்தின் நிதி வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளிப் படுத்தப்பட்டதையடுத்து குறித்த வங்கி கணக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனுடைய தொடர்புடைய பெண் அதிகாரியொருவர் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்கு மூலமளித்துள்ளார். அந்த விசாரணை அறிக்கைக்கு என்னவாயிற்று.

சீன மற்றும் இந்திய உரங்களால் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் டிசம்பரில் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் அமோனியம் சல்பேற்றினை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரசாயன உர பாவனையை தடை செய்வதாகக் கூறும் அரசாங்கம் எதற்காக அமோனியம் சல்பேற்றினை இறக்குமதி செய்கிறது? அமோனியம் சல்பேற்று சேதன உரம் என்று பொய் கூறி மக்களை ஏமாற்றி அதனை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா என்றார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.