Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- news@importmirror.com Admin-message


Headlines
Loading...
Admin-message

இறைதூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களது பிறந்ததினத்தை முன்னிட்டு ஏறாவூரில் கொடியேற்றமும் விசேட பிரார்த்தனையும்



ஏறாவூர் நிருபர் -நாஸர்-
றைதூதர் பெருமானார் முகம்மது நபி ஸல்லழ்ழாஹ{ அலைஹிவஸல்லம் அவர்களது பிறந்ததினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்ற கொடியேற்றத்தையடுத்து நாட்டின் சுபீட்சத்திற்கான விசேட பிரார்த்தனையுடன் பல்வேறு நிகழ்வுகள் 08.10.2021 ஆரம்பமாகியுள்ளன.

இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் றபிஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் முகம்மது நபி அவர்களது பிறந்த தினமாகும்.
இத்தினத்தைக்கொண்டாடுமுகமாக முஸ்லிம்கள் பல்வேறு அனுஷ்டானங்களில் ஈடுபடுதுண்டு .

அந்தவகையில் முதற்கட்டமாக மௌலவி ஏஏ. பஷீர் அஹமட் றப்பானி தலைமையில் வர்த்தகப்பிரமுகர், சமூகசேவையாளர் ஹ{ஸைன் மௌலானா முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மார்க்க பெரியார்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

மனாகிப் பாராயணம் மற்றும் மார்க்க உபன்னியாசம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் தினமும் நடைபெறுவதுடன் 12 ஆம் நாள் அன்னதானம் வழங்கப்படவுள்ளன.

தற்காலத்தில் உலகில் மனித உயிர்களைக்காவுகொள்கின்ற கொரோனா நோய்த்தொற்று அகன்று மனித இனம் நிம்மதியாக வாழவேண்டும்.

அத்துடன் எமது நாடு பொருளாதார ரீதியில் சுபீட்சம் பெற்று அனைத்து இன மக்களும் சௌஜன்யத்துடன் வாழவேண்டும். அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகத்தின்மீது நல்லெண்ணம் ஏற்படவேண்டுமென்றும் இங்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.