கிழக்கு மாகாண பாடசாலை கிரிகெட்டில் சாதனை படைத்த மூதூர் மத்திய கல்லூரி மாணவன் பஹீம் நுபைல்..



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாண கிரிகட் வரலாற்றில் முதலாவது இரட்டைச் சதம் பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தினார் மூதூர் மத்திய கல்லூரி மாணவன் பஹீம் நுபைல்.
இலங்கை பாடசாலை கிரிகட் சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்டு வரும் 19 வயதுக்குற்பட்ட தேசிய பாடசாலை மட்ட கிரிகட் தொடரில் மூன்றாவது லீக் முறையிலான போட்டியானது நேற்று (01) மூதூர் MCC மைதானத்தில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியன மோதிக்கொண்டன.

சர்வதேச ஒரு நாள் கிரிகட் போட்டியினை விதிமுறையாக கொண்ட குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மூதூர் மத்திய கல்லூரியானது முதலில் துடுப்பாட்டத்தினை தீர்மானித்தது. ஆரம்பம் முதலே போட்டியினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூதுர் மத்திய கல்லூரியானது மட்டு இந்துக்கல்லூரியின் பந்துவீச்சினை சிறப்பாக எதிர்கொண்டனர். அந்த அடிப்படையில் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பஹீம் நுபைல் நிதானமாகவும், அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 220 ஓட்டங்களினை 128 பந்துகளில் பெற்று கிழக்கு மாகாண ரீதியில் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாண பாடசாலை கிரிகட் வரலாற்றில் இதுவே முதல் இரட்டை சதமாகும்.
மட்டக்களப்பு மாவட்ட புகழ் பெற்ற பாடசாலை அணிகள் பங்குபெறும் இத்தொடரில் பெறப்பட்டிருக்கும் அதிகூடிய ஓட்டப் பெறுபேறாக இது பதிவாகியுள்ளது.
தேசிய ரீதியாக நடைபெறும் இத்தொடரில் மூதூர் சார்பாக சொந்த மண்ணில் இவ் இமாலய வரலாற்று சாதனையை நிகழ்த்தி மூதூர் மண்ணுக்கு பெருமை தேடிக் கொடுத்த மூதூர் மத்திய கல்லூரி அணியின் வீரர் உனைஸ் நுபைல் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு, மூதூர் மேற்கு பிராந்திய கிரிகட் சங்கம் மற்றும் மூதூர் கிரிகட் நடுவர்கள் அபிவிருத்தி மற்றும் பயிற்றுவிப்பு குழு ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டலின் அடிப்படியிலேயே மேற்படி போட்டித்தொடர் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :