Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

கருணா அம்மான் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் விஜயம்

பாறுக் ஷிஹான்-

பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று(22) அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு செயலாளராக நியமனம் பெற்ற இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் உள்ள அமைச்சர்கள் இந்திய தூதுவர் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் இன்று அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் விநாயகபுரம் பாலக்குடா கோமாரி தம்பட்டடை தாண்டியடி அக்கரைப்பற்று கல்முனை பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன் போது கல்முனை பகுதி மக்கள் விளையாட்டு கழகங்கள் பாடசாலை அதிபர்கள் வரவேற்றதுடன் தத்தமது தேவைகளை இணைப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அத்துடன் மேற்குறித்த பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் மக்களின் தேவைகள் மிக விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேடமாக வேலைவாய்ப்பு பிரச்சினை எதிர்வரும் எப்ரல் மாதம் அளவில் தீர்த்து வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் இப்பகுதிக்கு வருகை தந்த கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் இணைந்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.இதனை தொடர்ந்து அக்கரைப்பற்று பகுதிக்கு சென்றுவர பாலக்குடா மக்கள் பஸ் சேவை ஒன்றினை கேட்டதற்கிணங்க இன்று அதனை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இது தவிர பனை அபிவிருத்தி திணைக்களத்தின் அணுசரணையில் பெண்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்காக பனைசார்உற்பத்தி பொருட்களின் விற்பனை செயற்பாட்டையும் ஊக்குவிக்கும் முகமாக அவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட மடிவுப்பொருட்களை பார்வையிட்டு ஊக்குவிப்புகளை வழங்கியதுடன் சந்தை வாய்ப்பினை எதிர்காலத்தில் பெற்று தர ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.