தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 13 அரசியல் குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!


திருகோணமலையில் 13 அரசியல் குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

2020ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்கின்ற காலப்பகுதி இன்றுடன் நிறைவடைந்தது.

அந்த அடிப்படையில் இம்முறை திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுக்களாக 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுப் பத்திரங்கள் கிடைக்கப்பெற்றன.

அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 3 வேட்புமனுக்கள் மற்றும் 10 சுயேட்சைக் குழுக்களது வேட்புமனுக்கள் அடங்கலாக 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சிங்கள தீப ஜாதிக பெரமுன, தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளது வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தினுடைய 15ஆவது பிரிவுக்கு அமைய கையளிக்கப்படாத வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதித் தேர்தல் ஆணையாளரும் திருகோணமலை மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

அதன்படி இம்முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 27 அரசியல் குழுக்களது 189 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிபெற்றுள்ளதோடு அவர்களில் நாடாளுமன்றத்திற்கு நான்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளார்கள்.

2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 288,868 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -