Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் பிரமதாசாவினுடையது சிறப்பானது-சந்திரிகா


ரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தை கவனத்தில் கொள்ளுகையில் புதிய ஜனநா
யக முன்னணியின் வேட்பாளர் சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்பானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதன் போதே சந்திரிக்கா குமாரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்நது தெரிவிக்கையில்,

தனி நபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் தொடர்பான கோத்தாபயவின் கொள்கைகள் நகைப்பிற்குறியதாகும். 7 தடவை கட்சி தாவியவர் எமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றார்.

அதனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன். சு.க வை திட்டமிட்டு மஹிந்த ராஜபக்ஷ அழிக்க முயற்சிக்கையில் அதற்கு சாதகமான சூழலை 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் மைத்திரி ஏற்படுத்திக்கொடுத்தார்.

மொட்டுடன் கூட்டணியமைத்தமை கட்சியின் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானமல்ல.நாடு அரசியல் ரீதியிலும், பொது மக்களின் வாழ்வியல் ரீதியிலும் தீர்மானங்களை முன்னெடுக்கும் தீர்க்கமாக தருணத்தில் தற்போது உள்ளது.

இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளேன்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்தில் மனித உரிமைகளுக்கும், மக்களின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை பெரும் நகைப்பிற்குரியதாக காணப்படுகின்றது.

10 வருட கால குடும்ப ஆட்சியில் மனித உரிமைகளும், மக்களின் பாதுகாப்பும் எவ்வாறு காணப்பட்டது என்பதை நாட்டு மக்கள் இன்றும் மறக்கவில்லை.

எனக்கும் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிராக சுதந்திர கட்சியின் தலைவர் அல்ல பொதுச்செயலாளருக்கு கூட ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.

ஒருவேளை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதனை சட்டத்தின் ஊடாகவே வெற்றிக் கொள்வேன் ஒருபோதும் குறுக்கு வழியில் செல்லமாட்டேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.