தேர்தல் பிரச்சார நிதியாக்கம் ஏன் ஒரு பிரச்சனையாக உள்ளது?


ஜே.எப்.காமிலா பேகம்-
தேர்தல் காலங்களில் மற்றைய வேட்பாளர்களை தேர்தலில் இருந்து விலகச்செய்யும் ஓர் விதத்தில் சில வேட்பாளர்கள் நிதியை உபயோகிப்பதற்கு இயலுமாக இருப்பதால் கட்டுப்படுத்தப்படாத அல்லது மட்டற்ற நிதிச்செலவீனங்கள் ஜனநாயக தேர்தல்களை மோசமான வகையில் பாதிக்க முடியும்.இது வேட்பாளர்கள மத்தியில் ஒரு சமனற்ற போட்டியான நிலையை உருவாக்கும்.இதனால் ஊழல் அரச சொத்துக்களின் துஸ்பிரயோகம்; வன்முறைகள் போன்றன இடம் பெற வழிகோலும்.

வேட்;பாளர்கள் பொதுவாக பின்வரும் செலவுகளை செய்கின்றனர். தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் துண்டுப்பிரசுரங்கள் போன்றவற்றை அச்சடித்து வெளியிடல் விளம்பரங்கள் கைப்பிரசுரங்கள் கொடிகள் படங்களை வெளியிடல் அல்லது சுலோக அட்டைகள் சுவரொட்டிகள என்பவற்றை பாவித்தல.வானொலி தொலைக்காட்சி சமுக ஊடகங்கள் போன்றவற்றில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒலி ஒளிபரப்பு செய்தல்.அவ்வாறே அச்சு ஊடகங்களை; தேர்தல் பிரச்சார நோக்குடன் விளம்பரங்களுக்கு அல்லது நிகழ்ச்சிகளுக்கு பணம் செலவிடல். கூட்டங்களுக்காக உபகரணங்களை வாடகைக்கு பெற்று பயன்படுத்தல்.வேட்பாளர்களுக்கு போக்குவரத்துக்காக கெலிகொப்டர்கள் மற்றும்; விமானங்களை தேர்தல் பிரச்சார போக்குவரத்துக்காக வாடகைக்கு எடுக்கும் செலவுகள்.பொதுச்சொத்துக்களை தனிப்பட்ட பிரச்சாரங்களுக்காக பாவிப்பதனால் ஏற்படும் செலவுகள் போன்றன ஆகும்.

கடந்த ஒக்டோபர் 14 தொடக்கம் 31 வரையான காலப்பகுதியில் இம்முறை ஜனாதிபதி தேர்தல்பிரச்சார செலவுகள் எவ்வாறு உள்ளன என்பதை தேர்தலுக்காக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கணிப்பிட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி கடந்த இருவாரங்களுக்குள் இலங்கை பொதுஜன முன்னனி 574 மில்லியன் எனவும் ஜக்கிய தேசிய முன்னனி 372 மில்லியன் ஆகவும் தேசிய மக்கள் கட்சி 16 மில்லியன் எனவும் கணித்துள்ளது.பிரதான 3 வேட்பாளர்களில்; ஒவ்வொருவரினாலும் மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவுகளின் பங்குகளின் அடிப்படையில் நோக்குவோமாயின் இலங்கை மக்கள் முன்னனி 60 வீதமான செலவையும் ஜனநாயக தேசிய முன்னனி 39 வீதமான செலவையும் தேசிய மக்கள் சக்தி ஒரு வீதமான செலவையும் செய்துள்ளதாக சிஎம்வீ கண்காணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிரச்சார நிதியாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு இது தொடர்பாக இது வரை எந்த ஓரு பொறிமுறையோ சட்டமோ இல்லை. இது சம்பந்தமாக சீஎம்வீ யின் பணிப்பாளர் திரு மநசுல கஜநாயக்க கருத்து தெரிவிக்கையில் இந்த அளவு நிதியை கையாளும் வகையில் பணம் எங்கிருந்து வருகிறது என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் எமது நோக்கம் வெறுமனே செலவுத்தொகையில் கவனம் செலுத்துவது மட்டுமன்றி தேர்தல் பிரச்சாரங்களின் கட்டுப்பாடற்ற நிகியாக்கத்தின் பாதிப்பு தொடர்பில் ஒரு மக்கள் அபிப்ராயம் மற்றும் சமூக பரப்புரையை கட்டியெழுப்பி அதன் மூலமாக இலங'கையில் தேர்தல் பிரச்சார நிதியாக்க சட்டவாகடகததின் அவசியமானவையை சுட்டிகாட்டுவது இதன் பிரதான குறிக்கோலாகும் என குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -