அரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே!


ஷிபான்-
ரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழிகோலியது இன்றைய ஐ.தே.க ஆட்சியே. 2015ல் அரச ஊழியனின் அடிப்படை சம்பளத்தில் 10000/- அதிகரிப்பானது ஒவ்வொரு அரச ஊழியனும் ஐ.தே.க அரசு நிலைத்திருக்க வாக்களிக்க போதுமானது.
இந்த நாட்டை 10 வருடங்கள் ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ஸ 2010 ஜனாதிபதித்தேர்தலிலே சரத் பொன்சேக்கா அரச ஊழியனுக்கு 10000/- அதிகரப்பதாக கூறவே; “எப்படி இந்த 10000/- சம்பள அதிகரிப்பு சாத்தியம்? எனக்கேட்டு 5000/- கூட்டுவதாக வாக்குறுதியளித்து கடைசியில் 2500/- மாத்திரமே மகிந்தரால் கூட்டப்பட்டது” என்பது வரலாறு.

10 வருடத்தில் மகிந்தவால் முடியாமல் போன விடையத்தினை வெறும் நான்கே வருடத்தில் ஐ.தே.க செய்து முடித்ததனை ஒவ்வொரு அரச ஊழியனும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய தேவை உள்ளது.
மகிந்த அரசிலே இந்த நாட்டின் எதிர்கால சந்ததிக்காக மாடாய் உழைத்து ஓடாய் தேயும் ஆசிரியர் வர்க்கத்தினை நோக்கி மகிந்தவின் கல்வி அமைச்சராகவிருந்தவரும் பொருளியல் ஆசிரியருமாகிய பந்துல குணவர்த்தனா; “ஆசிரியரின் குடும்ப செலவுக்காக வெறும் 2500/- போதுமானது” எனக்கூறி ஆசிரிய வர்க்கத்தை கொச்சை படுத்தியதும்; அந்த நேரத்திலே ஐ.தே.க வரிசையிலே இருந்த தயாசிறி ஜயசேகர “உங்களிடம் பொருளியல் படித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்” எனக்கூறியதையும் எந்த ஆசிரியனும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இந்த ஆட்சியிலே, யாருக்கும் தெரியாமலேயே 2016/3ம் இலக்க சுற்று நிருபத்தின் ஊடாக இலங்கை ஆசிரியர் சேவை தர அடிப்படையின் பிரகாரம் 2019/2020ம் ஆண்டு சம்பள அதிகரிப்பு நிகழவுள்ளது. (உதாரணமாக SLTS-1 ஆசிரியருக்கு வருடமொன்றுக்குள் சுமார் 7000/- வரையான சம்பள அதிகரிப்பும் இடம்பெற உள்ளது)
நிதிச்சட்டம் 1 : 4.5 என்ற அமைப்பில் உள்ள சம்பள முரண்பாட்டின் மூலம் ஆசிரியருக்கான சம்பள அதிகரிப்புக்களை மேற்கொள்ள முடியாத நிலை நம் நாட்டிலே முன்னர் காணப்பட்டது. ஆனால் அண்மைய பேச்சுவார்த்தைகள் மூலம் ஆசிரியர் சேவை ஒன்றிணைந்த சேவைக்குள் கொண்டுவரப்பட்டு சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதும் இந்த ஐ.தே.கா ஆட்சியிலேதான்.
சம்பளம் கூட்டி வாழ்க்கை செலவைக் குறைத்தது ஐ.தே.க அரசின் நல்லாட்சியே! மாறாக மகிந்தரின் ஆட்சி சம்பளம் குறைத்து வாழ்க்கை சுமையை ஏற்றியிருந்தது என்பது மேலேயுள்ள நிழ்ல்படத்தினூடே தெளிவாகும்.
ஆகவேதான் அரச ஊழியர்களே!ஆசிரியர்களே! பகுத்தறிவிருந்தால் சிந்தித்து நோக்குங்கள். எதிர்வரும் சஜித் அரசின் ஆட்சி அரச ஊழியனுக்கு வரப்பிரசாதமே!


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -