இன்று காரைதீவிலிருந்து மண்டூர்பதிக்கு திருத்தல பாதயாத்திரை..




காரைதீவு நிருபர் சகா-
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான சின்னக்கதிர்காமம்என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டி காரைதீவிலிருந்து இன்று(7) சனிக்கிழமை அதிகாலை 4மணிக்கு அண்டுரை நோக்கிய பாதயாத்திரையொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மண்டுர் முருகனாலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.
இவ் உற்சவத்தை முன்னிட்டு வழமை போல இம்முறையும் காரைதீவு இந்து விருத்தி சங்கத்தின்ரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதையாத்திரையானது சைவமும் தழிழும் தளைத்தோங்கும் பூண்ணிய பூமியாம் காரைதீவுப்பதினிலிருந்து அதிகாலை வேளையில் காரைதீவு மாவடிக் கந்த சுவாமி ஆலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகளின் பிற்பாடு ஆலயத்திலிருந்து புறப்படவுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இப்பாதயாத்திரை கல்முனை நற்பட்டிமுனை சேனைக்குடிருப்பு நாவிதன்வெளிவேப்பயடி தம்பலவத்தையுடாக பல மைல்கள் கடந்து மண்டூர்பதியினை சென்றடையவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -