இலங்கைக்கு 77 ஆவது இடம் கிடைத்துள்ளது...!

சிதம்பரம்-

லக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் 140 நாடுகளின் ஒப்பீட்டு பலத்தை தரவரிசைப்படுத்தி உள்ளது. இதில் ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும், இங்கிலாந்துக்கு பதிலாக அமெரிக்கா முதல் ஐந்து இடங்களைப் பிடித்தது.

முதல் 10 இடங்களில் இங்கிலாந்து 6 ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா 7ஆவது, இத்தாலி 8ஆவது, கனடா 9 ஆவது மற்றும் சுவிட்சர்லாந்து 10 ஆவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இலங்கை இத்தரவரிசையில் உலக அளவில் 77 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த ஆண்டு தரவரிசையில் ஆசியா-பசிபிக் வேகமாக வளர்ந்து வரும் பயண மற்றும் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாகும் என்று அறிக்கை கூறியுள்ளது.

ஜப்பான் ஆசியாவின் மிகவும் பயண மற்றும் சுற்றுலா பொருளாதார நாடாக உள்ளது. உலகளவில் 4 ஆவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சீனா ஆசிய-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய பயண மற்றும் சுற்றுலா பொருளாதார நாடாகவும் உலகளவில் 13 ஆவது போட்டியாகவும் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -