Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

பாராளும‌ன்ற‌த்தில் உலமாக் கட்சித் தலைவரின் உரை..!

க‌ட‌ந்த‌ வார‌ம் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சியால் பாராளும‌ன்ற‌த்தில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌ தேசிய‌ பாதுகாப்பு ச‌ம்ப‌ந்த‌மான‌ சிபாரிசுக‌ள் ப‌ற்றி ஆராயும் பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் மாநாட்டில் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் பேசிய‌தாவ‌து,

இங்கு நாம் கூடியிருப்ப‌து தேசிய‌ பாதுகாப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆராய்வ‌த‌ற்காகும். ஆனால் இங்கு ப‌ல‌ர் முஸ்லிம்கள் மீது குறை கூறின‌ர். இன்றைய‌ சூழ‌லில் பேச்சை குறைத்து சொல்வ‌தை கேட்ப‌து என்ற‌ கால‌த்தில் நான் இருக்கிறேன். இருந்தும் என்னிட‌ம் இக்கேள்விக‌ள் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்காக‌ சுருக்க‌மாக‌ ப‌தில் த‌ருகிறேன்.

முஸ்லிம்க‌ளின் தொப்பி ப‌ற்றி கேட்க‌ப்ப‌ட்ட‌து. தொப்பி போடுவ‌து ஆயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ முஸ்லிம்க‌ளின் க‌லாசார‌மாக‌ உள்ள‌து. தொப்பி போட‌த்தான் வேண்டும் என‌ இஸ்லாமிய‌ மார்க்க‌ம் சொல்ல‌வில்லை. ஆனாலும் இது எம‌து பார‌ம்ப‌ரிய‌ முஸ்லிம்க‌ளின் க‌லாசார‌மாக‌ உள்ள‌து.

30 வ‌ருட‌த்துக்கு முன் முஸ்லிம் பெண்க‌ள் சாரி அணிய‌வில்லை. இப்போது ஏன் அபாயா என‌ கேட்கிறீர்க‌ள்.
கௌர‌வ‌ அமைச்ச‌ர் அவ‌ர்க‌ளே. 30 அல்ல‌து 40 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இங்கிருப்போரின் த‌ந்தைமார் நாம் இப்போது அணொவ‌து போல் லோங்க்ஸ் ஜீன்ஸ் அணிந்தார்க‌ளா? இல்லையே. இருந்தும் நாம் ஏன் அணிகின்றோம். இது கால‌ மாற்ற‌த்தால் ஏற்ப‌ட்ட‌தாகும்.
அந்நாளில் சிங்க‌ள‌, த‌மிழ் பெண்க‌ள் இப்போதுபோல் ஜீன்ஸ், குட்டைக்க‌வுன், ஸ்கேட் அணிந்தார்க‌ளா? இல்லையே.

அப்ப‌டித்தான் முஸ்லிம் பெண்க‌ள் சாரி அணிய‌ வேண்டும் என்றால் இந்த‌ நாட்டில் வாழும் அனைத்து இன‌ பெண்க‌ளும் சாரி ம‌ட்டுமே அணிய‌ வேண்டும், ஜீன்ஸ், க‌வுன், ரி சேட் அணிய‌க்கூடாது என்ற‌ ச‌ட்ட‌த்தை கொண்டு வாருங்க‌ள். 

நாமும் உட‌ன் ப‌டுவோம்.
குர் ஆனில் ம‌ற்றோரை கொல்லும் ப‌டி சொல்லியுள்ள‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து. இது முன் பின் வ‌ட‌ன‌ங்க‌ளை துண்டித்து விட்டு சொல்வ‌தாகும். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ரிட‌ம் நான் என்னை நீ கொல்ல‌ வ‌ந்தால் உன்னை நான் கொல்வேன் என‌ நான் சொன்னால் இவ‌ர் என்னை கொல்வேன் என்கிறார் என‌ என் மீது குற்ற‌ம் சாட்டுவ‌து போன்ற‌தாகும். நான் ச‌வாலாக‌ சொல்கிறேன். அப்பாவிக‌ளை அநியாய‌மாக‌ கொல்லுங்க‌ள் என்ற‌ ஒரு வ‌ச‌ன‌த்தை குர் ஆனிலிருந்து காட்ட‌ முடியுமா?

க‌ட்சிக‌ளின் பெய‌ர்க‌ளை இன‌, ம‌த‌, பிர‌தேச‌ அடிப்ப‌டையில் வைப்ப‌தை த‌டை செய்ய‌ வேண்டும் என‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து. ஹெல‌ உறும‌ய‌, த‌மிழ் காங்கிர‌ஸ், த‌மிழ் கூட்ட‌மைப்பு, முஸ்லிம் காங்கிர‌ஸ் என‌ இக்க‌ட்சிக‌ளும் த‌ம் பெய‌ரை மாற்ற‌ முன்வ‌ருமாயின் நாமும் எம‌து க‌ட்சியின் பெய‌ரை மாற்ற‌ த‌யார். ஆனாலும் இதுதான் இந்நாட்டின் தேசிய‌ பாதுகாப்புக்கு தீர்வாகுமா?

இங்குள்ள‌ பிர‌ச்சினை க‌ட்சியின் பெய‌ரை இன‌, ம‌த‌ அடிப்ப‌டையில் வைப்ப‌த‌ல்ல‌, பொதுவான‌ பெய‌ர் கொண்ட‌ க‌ட்சியிலும் இன‌வாத‌த்தை பேசுவோர் இருப்ப‌துதான். ஐ தே க‌, சு.க‌, ஜே விபி போன்ற‌ க‌ட்சிக‌ளில் இல்லையா? ஆக‌வே எந்த‌க்க‌ட்சியில் உள்ள‌வ‌ரும் இன்னொரு இன‌த்தை, ம‌த‌த்தை அவ‌ம‌திக்கும் பேச்சை பேசினால் அவ‌ர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ இருந்தாலும் ச‌ரி, ச‌ம‌ய‌த்த‌லைவ‌ராக‌ இருந்தாலும் ச‌ரி அவ‌ருக்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கும் ச‌ட்ட‌த்தை கொண்டு வாருங்க‌ள்.

இங்கு ஹிஸ்புல்லா ப‌ற்றி சொல்ல‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர் கோயில் காணியை ச‌ட்ட‌ப்ப‌டி வாங்கிய‌தாக‌ கூறியுள்ளார். ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌, நீதிப‌தியை மாற்றி பெற்றிருந்தால் இப்போது நீதிம‌ன்ற‌த்தை நாடி மீள‌ப்பெற‌லாமே. இதை விடுத்து புலிக‌ள் கால‌த்தில் ந‌ட‌ந்த‌வை ப‌ற்றி பேசுவ‌தில் அர்த்த‌மில்லை. அத்துட‌ன் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் ஹிஸ்புல்லா சுத‌ந்திர‌க்க‌ட்சியில் போட்டியிட்டால் நாம் ஒத்துழைக்க‌ மாட்டோம் என‌ இங்கு த‌மிழ் க‌ட்சி ஒன்றின் த‌லைவ‌ர் கூறினார். பொதுவாக‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் ம‌க்க‌ள் சுத‌ந்திர‌க்க‌ட்சிக்கு வாக்க‌ளிப்ப‌தில்லை. அதிக‌ம் வாக்க‌ளிப்ப‌து த‌மிழ் கூட்ட‌மைப்புக்குத்தான். ஹிஸ்புல்லாவின் கையில் சுமார் முப்ப‌தினாயிர‌ம் வாக்குக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தை நாம் ம‌ற‌ந்து விட‌க்கூடாது.

அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் மீதும் இங்கு குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர் முஸ்லிம் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு உத‌வினார் என‌. ஒன்றை நாம் தெரிந்து கொள்ள‌ வேண்டும். எந்த‌ அர‌சிய‌ல்வாதியும் தான் ம‌ர‌ணிக்க‌ வேண்டும் என‌ நினைக்க‌ மாட்டார். வாழ‌வே நினைப்பார். இந்த‌ நிலையில் இப்ப‌டியான‌ ப‌ய‌ங்க‌ர‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளுக்கு அமைச்ச‌ர் ரிசாத் நிச்ச‌ய‌ம் தெரிந்து கொண்டே துணை போக‌ மாட்டார். அத்துட‌ன் அவ‌ர் அனைத்து ம‌க்க‌ளுக்கும் இர‌வு ப‌க‌லாக‌ சேவை செய்வ‌தால் பொறாமையின் கார‌ண‌மாக‌வே அவ‌ர் மீது குற்ற‌ச்சாட்டுக‌ள் முன்வைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. 

முஸ்லிம்க‌ள் அதிக‌ம் குழ‌ந்தைக‌ள் பெறுகின்ற‌ன‌ர் என்ப‌து க‌ற்ப‌னை. (இங்கு பேசிய‌ முன்னாள் அமைச்ச‌ர் ம‌ஹிந்த‌ அம‌ர‌வீர‌, முஸ்லிம்க‌ளின் பிள்ளை பேறுவீத‌ம் அதிக‌ம் என்ப‌து பொய் என்றும் சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் பிற‌ப்பு வீத‌ம் அதிக‌ரித்துள்ள‌து என்ற‌ த‌க‌வ‌ல் உண்மை என்றும் கூறினார்.)

இன‌ ரீதியிலான‌ பாட‌சாலைக‌ளை இல்லாம‌ல் செய்வ‌து என்ப‌து ப‌ல‌ சிக்க‌ல்க‌ளை ஏற்ப‌டுத்தும். அது ப‌ற்றி பின்ன‌ர் விள‌க்குகிறேன். ஆனாலும் தேசிய‌ பாதுகாப்பு பிர‌ச்சினைக்கும் இத‌ற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?

இங்கு சொல்ல‌ப்ப‌ட்ட‌து சில‌ முஸ்லிம் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் தாம் வ‌ழ‌ங்கும் கிணறு, வீடுக‌ளில் அர‌பு மொழியில் பென‌ர் வைத்துள்ள‌தாக‌. 

ஒரு நாட்டை சேர்ந்த‌வ‌ர் இங்குள்ள‌ தொண்டு நிறுவ‌ன‌த்துக்கு ப‌ண‌ம் வ‌ழ‌ங்கினால் அது உண்மையில் செல‌வு செய்ய‌ப்ப‌ட்ட‌தா அல்ல‌து சுருட்ட‌ப்ப‌ட்ட‌தா என்ப‌தை அறிய‌ முணைவார். ஒரு ஜேர்ம‌ன்கார‌ர் ப‌ண‌ம் அனுப்பினால் அவ‌ருக்கு ஆங்கில‌ம் தெரியாவிட்டால் ஜேர்ம‌ன் மொழியில் பென‌ர் போட்டு போட்டோ எடுத்து அனுப்ப‌ வேண்டும். அது போல் அர‌பிக‌ள் அனுப்பும் ப‌ண‌த்தை ஏழைக‌ளுக்கு கொடுத்தால் அது ப‌ற்றி அர‌பு மொழியில் பென‌ர் போட்டு போட்டோ எடுத்து அனுப்புவ‌து தொண்டு நிறுவ‌ன‌த்தின் க‌ட‌மையாகும். இதை குற்ற‌ம் சொல்வ‌து ம‌ட‌மையாகும். 

ஆனாலும் இவ்வாறான‌ தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எதிர்கால‌த்தில் அர‌பு மொழியில் ம‌ட்டும் பென‌ர் போடாம‌ல் த‌மிழ், அல்ல‌து சிங்க‌ள‌ மொழியையும் சேர்த்து போட‌ வேண்டும் என என் ச‌மூக‌த்துக்கு நான் சொல்கிறேன்.

ஹிஸ்புல்லா முஸ்லிம்க‌ளுக்கு ஆயுத‌ம் வ‌ழ‌ங்கிய‌தாக‌ அவ‌ரே சொன்ன‌தாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து. அர‌சிய‌ல்வாதி என்றால் த‌ன் ச‌மூக‌த்துக்கு செய்த‌வ‌ற்றை சொல்ல‌த்தான் செய்வார். இன்றைய‌ த‌மிழ் கூட்ட‌மைப்பில் உள்ள‌ ப‌ல‌ர் தாம் ஆயுத‌ம் ஏந்தி த‌மிழ் ம‌க்க‌ளுக்காக‌ போராடிய‌தாக‌ சொல்ல‌வில்லையா? த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் முஸ்லிம் ஊர்க‌ளை தாக்கிய‌ போது அங்கு பொலிசோ, ராணுவ‌மோ வ‌ர‌ முடியாத‌ நிலை இருந்த‌ போது மறைந்த‌ த‌லைவ‌ர் த‌லையிட்டு முஸ்லிம்க‌ளின் த‌ற்காப்புக்காக‌ அர‌சிட‌மிருந்து ஆயுத‌ம் பெற்றுக்கொடுத்தார்.

 அந்த ஆயுத‌ங்க‌ளைத்தான் ஹிஸ்புல்லாவும் வ‌ழ‌ங்கிய‌தாக‌ சொல்கிறார். அவை அனைத்தும் ச‌ட்ட‌ப்ப‌டி அர‌சால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌வையாகும்.


முஸ்லிம்க‌ள் நாட்டின் ச‌ட்ட‌த்தை ம‌திப்ப‌தில்லை என‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து. இது அதீத‌ க‌ற்ப‌னை. நாட்டின் ச‌ட்ட‌த்தை ம‌திக்காம‌ல் ஆயுத‌ம் தூக்கிய‌ ஜேவிபியின‌ர் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல்லையா? த‌மிழ‌ர்க‌ள் ஆயுத‌ம் தூக்க‌வில்லையா? ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌ செய‌ற்ப‌டுவோர் எல்லா ச‌மூக‌த்திலும் உண்டு. முஸ்லிம்க‌ள் ஹெல்மெட் போடாம‌ல் சென்றால் இத‌ற்கு பொறுப்பு சொல்ல‌ வேண்டிய‌து போக்குவ‌ர‌த்து பொலிசாகும். இவ்வாறு ஹெல்ம‌ட் போடான‌ல் செல்வோரை பொலிசார் பிடிப்ப‌தை ப‌ல‌ முஸ்லிம் கிராம‌ங்க‌ளில் காண்கிறோம். அது ம‌ட்டுமின்றி போக்கு வ‌ர‌த்து பொலிசார் கிழ‌க்கில் அதிக‌ம் ந‌ட‌மாடுவ‌து முஸ்லிம் ஊர்க‌ளில்தான்.

முஸ்லிம் பெண்க‌ள் இள‌ வ‌ய‌து திரும‌ண‌ம் என்ப‌து பொய்யாகும். எம் ச‌மூக‌த்தில் 30 வ‌ய‌து தாண்டியும் ம‌ண‌முடிக்க‌ வ‌ச‌திய‌ற்ற பெண்க‌ளே அதிக‌ம். வேண்டுமென்றால் இது ப‌ற்றி க‌ள‌ ஆய்வை செய்ய‌ அர‌சை சொல்லுங்க‌ள்.

ஆக‌வே தேசிய‌ பாதுகாப்பு மிக‌ அவ‌சிய‌ம். அத‌ற்கான‌ வ‌ழியை நாம் தேட‌ வேண்டும். அத‌ற்கு ஒத்துழைக்க‌ நாமும் முஸ்லிம் ச‌மூக‌மும் த‌யாராக‌வே உள்ளோம். அதை விட்டு விட்டு அபாயா, தொப்பி என்றெல்லாம் சின்ன‌ விட‌ய‌ங்க‌ளை பேசுவ‌து புற்று நோய்க்கு பென‌டோலை நாடுவ‌து போன்ற‌தாகும்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.