Penனும் பெண்ணும்


Penனும் பெண்ணும்

++++++++++++++++
Mohamed Nizous


கிறுக்கும் கீழ் விழும்

கீர்த்தியும் பெற்றுத் தரும்.
மறுக்கும் சில நேரம்
மறுபடியும் உதவும்.
வெறுக்கும் விடயங்களையும்
பொறுத்து வடிக்கும்.
இருக்கின்ற கைக்கேற்ப
எல்லாம் நடக்கும்.

மூடி இருக்கும்
முகம் தாழ்த்தி வேலை செய்யும்.
தேடி அலைய வைக்கும்
திருத்தமாய் பேணாது விடின்.
விரல்களில் கோர்த்து
விண்ணையும் தொட வைக்கும்
தெருவிலே வீசி விட்டால்
தேவையின்றி மிதி படும்

சட்டைப் பையோடு
சதாவும் உறவு கொள்ளும்
கெட்ட நேரங்களில்
கொட்டி வீம்பு பண்ணும்
ஒட்டும் உறவாடும்
உதவி பல செய்யும்
அட்டகாசம் செய்வோர்க் கெதிராய்
ஆயுதாமகவும் மாறும்

பென் 
கையெழுத்தை வடிக்கும்
பெண்
தலையெழுத்தையே வடிக்கும்...


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -