ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைதியின்மை..!

எமது செய்தியாளர்- 

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்பொழுது விடுதி பிரச்சினையால் இரு மாணவ குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று இரவு பெண்கள் விடுதிக்குள் சிலர் புகுந்து அட்டகாசம் புரிந்ததாலே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றது இதன் போது அங்கு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமைடைந்துள்ளாதாகவும் தெரிவிக்கின்றது.

மேலும், உபவேந்தர் காரியாலயம் மீது மாணவர்கள் கல் வீச்சுக்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் தொடர்ந்தும் நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகாவும் இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்..

இணைப்பு2
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக (ஒலுவில்) மாணவிகள் தங்கியிருக்கும் நிந்தவூர் விடுதிக்குள் நேற்றிரவு ஆண்கள் சிலர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 45 மாணவிகள் தங்கி இருப்பதாகவும் இவர்களுக்கு பாதுகாப்பான விடுதியை வழங்குமாறு கோரியும் தற்பொது மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதையே இந்த படங்களில் காண்கிறீர்கள்.
எனினும் மேற்படி ஆர்ப்பாட்டம் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்களும் வெளியாகி கொண்டிருக்கிறது. ஒரு சில மாணவிகளின் தவறான போக்குகளே இதற்கு காரணம் என்று சிலரும், நிந்தவூரில் தங்கி இருக்கும் மாணவிகளையும் ஒலுவில் பெண்கள் விடுதிக்குள் உள்வாங்கும் ஒரு நடவடிக்கையே இதுவென்று சிலரும் தெரிவிக்கின்றனர்.

எது எப்படி இருந்த போதும் மாணவிகள், குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் தங்களது மார்க்க விதிமுறைகளுக்கு உள்ளாக தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு கல்வியை தொடர்ந்தால் அதுவே சமூகத்திற்கு அவர்கள் செய்யும் மிகப்பெரும் பணியாகும்.

 மேலதிக விபரங்கள் விரைவில் இம்போட் மிரர் இணையத்தளத்தில்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -