ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவின் பேரில் கிழக்கு முதலமைச்சுப்பதவி SLMC யின் வசம்!

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் சற்றுமுன் நிமல் சிறிபால இசுசில் பிரேம் ஜயந்த தலைமையில் நடந்த கலந்துரையாடலில் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவின் பேரில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வரும் தினங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  முதலமைச்சர் பதவிக்கு ஒருவரை தெரிவி செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு சில முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை புரன்ட் ரணர்ஸ் இடையே கடும் பேட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -