கல்முனை சாஹிபு வீதியின் அவலம்; ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி நேரடி விஜயம்!

அஸ்லம் எஸ்.மௌலானா-

டந்த இரு வருடங்களாக தடைப்பட்டுள்ள கல்முனை சாஹிபு வீதியின் புனரமைப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தோடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் வீதி அபிவிருத்திக்குப் பொறுப்பான விசேட ஆலோசகர் ரத்னாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்து குறித்த வீதியின் அவல நிலை குறித்து நேரடியாகக் கண்டறிந்துள்ளார்.

கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளின் பேரில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி மகநெகும நிறுவனத் தவிசாளர் கிங்ஸ்லி ரணவக்க அங்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கிய அறிக்கையைத் தொடர்ந்தே ஆலோசகர் ரத்னாயக்க நேற்று கல்முணைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர் எம்.அலியார் உள்ளிட்ட குழுவினர் சகிதம் இங்கு வருகை தந்த ஆலோசகர் ரத்னாயக்க, இவ்வீதியின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கை விடப்பட்டிருப்பதால ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்தும் அதனால் பொது மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் பற்றியும் நேரடியாக கண்டறிந்து தனது கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

அதேவேளை இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை கூடிய விரைவில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் அவர் உறுதியளித்தார்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் அரைகுறை நிலையில் இடை நிறுத்தப்பட்டிருப்பதால் இவ்வீதியில் வசிக்கின்ற மக்கள் மாத்திரமல்லாம பொதுவாக இவ்வூர் மக்கள் அனைவருமே பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வடிகானுக்காக தோண்டப்பட்ட பாரிய மதகுகள் கூட மூடப்படாமல் மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

அத்துடன் மழை காலங்களில் இவ்வீதியின் மோசமான நிலை காரணமாக இப்பகுதி மக்கள் பெரும் துயரங்களை அனுபவிக்க நேரிடுகிறது. அத்துடன் விரைவில் பருவ மழை ஆரம்பிக்க விருப்பதால் இவ்வீதியும் அதில் அமைந்துள்ளா நூற்றுக்கணக்கான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது என்றும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

ஆகையினால் இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பித்து துரித் கதியில் அவ்வேலைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறு முதல்வர் நிஸாம் காரியப்பர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் கடந்த மே மாதம் முதல்வர் எடுத்துக் கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது சில தினங்களில் மீண்டும் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வீதியில் வசிக்கின்ற 128 குடும்பத்தினர் கையொப்பமிட்டு முதல்வரிடம் கையளித்திருந்த முறைப்பாட்டு மகஜரைத் தொடர்ந்து அவர் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு வீதியின் புனரமைப்புப் பணிகளை மீள் ஆரம்பிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :