முனாப் நுபார்தீன்.-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்களுக்கு ஒரு காலம் வரும் (அப்போது மனிதர்கள்) அவர்களின் நோக்கம் அவர்களின் வயிறாகவிருக்கும். அவர்களின் கௌரவம் அவர்களது சொத்துக்களாகவிருக்கும். அவர்களின் கிப்லா அவர்களின் பெண்களாக இருப்பார்கள் அவர்களின் மார்க்கம் தங்கம் வெள்ளி ஞானயங்களாகவிருக்கும். அவர்கள்தான் மிகக்கெட்ட படைப்பாவார்கள் அவர்களுக்கு அல்லாஹ்விடம் எவ்வித பாக்கியதையும் கிடையாது.(நூல் : கன்சுல் உம்மால்)
இன்றய அவசரமான உலகில் பொருளியல் அரசியல் அறிவியல் ஆண்மீகம் என்று பல்வேறு போட்டிகள் அரங்கேறிக்கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம் இந்த அத்தனைப் போட்டிகளிலும் எதில் அதிகமான பொருளிட்டipனை அடைந்து கொள்ள முடியுமோ அதிலேயே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டக் கூடியவர்களாகவும் அதிகம் கவணம் செலுத்தக் கூடியவர்களாகவும் உள்ளனர். ஆதலால்தான் அரசியல் முதல் ஆண்மீகம் வரை அத்தனை அம்சங்களும் இன்று பொருளாதாரத்தினை அடிப்படையாகக் கொண்ட வியாபாரமாகவே மாறிவிட்டிருப்பதனைப் பார்க்கின்றோம்.
ஒரு அரசியல்வாதியை எடுத்துக் கொண்டால் அவனது அரசியலின் அடிப்படை நோக்கமே மக்கள் சேவை என்பதை விட தன்னலம் காத்தல் எனும் அடிப்படையில் பொருளீட்டலாகவே காணப்படுகின்றது. அவ்வாறே அறிவியலைப் பொறுத்தவரையிலும் அறிவியலின் அத்தனைப் பகுதியினர்களதும் ஒரே இலட்சியம் பொருளாதாரமே அவ்வாறேதான் ஆண்மீகத் துறையைப் பொறுத்தவரையிலும் பொருளாதாரமே முன்னி வகிப்பதனைப் பார்க்கின்றோம். ஆதலால்தான் தங்களை அழைப்பாளர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்ளக்கூடியவரகளிடம் கூட அறியாமை அரசோச்சுவதனைப் பார்கின்றோம்.
மேற்படி நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட நபி வழிச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் உலகின் இறுதிக்காலங்களில் மனிதர்களின் நோக்கம் அதற்கான அவர்களின் முன்னெடுப்புக்கள் செயல்பாடுகள் எவ்வாறு காணப்படும் என்பது பற்றித் தெளிவு படுத்தியுள்ளார்கள்
அவைகளாவன.
1. மனிதர்களின் முழு நோக்கமும் அவர்களின் வயிறாகத்தான் இருக்கும். அதாவது வயிற்றுப் பிளைப்புக்காகவே வாழ்கை நடாத்துவார்கள்.
2. சொத்து இருப்பதே கௌரவம் என்று எண்னுவார்கள். ஆதலால் சொத்து சேர்ப்பதில் போட்டி போடுவார்கள்.
3. அவர்களின்; மணைவி மக்களே அவர்களின் கிப்லாவாகும் என்பதன் பொருள் தங்கள் மனைவி மக்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதுவே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும்.
4. அவர்களின் மார்க்கம் தங்கம் வெள்ளி ஞானயங்களாகவிருக்கும் என்பதன் பொருள். பணத்திற்காக வேண்டி மார்க்கத்தையே புறக்கணித்து வாழ்வார்கள்.
மேற்படி நான்கு நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களையே நாம் இன்று அதிகளவில் கண்டு கொண்டிருக்கின்றோம். இந்த நிலை நீடிக்கும் போது ஏற்படும் கால சூழல் எவ்வாறு அமையும் என்பது பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள் மீது மோசடியான சில வருடங்கள் நிலவும்; அக்காலத்தில் பொய்யன் உண்மையாளனாகக் கருதப்படுவான் உண்மையாளன் பொய்யனாகக் கருதப்படுவான் மோசடிக்காரன் நம்பப்படுவான் நம்பிக்கையாளன் மோசடிக்காரனாகக் கருதப்படுவான் அப்போது றுவைபிளாக்கள் பேசுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது றுவைபிளாக்கள் என்போர் யார்? அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே என்று கேட்க்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அறிவற்ற மனிதன் பொது விடயம் பற்றி பேசுவான் என்று கூறினார்கள்.
மேற்படி நபி மொழியில் உலகின் கடைசிக் காலங்களில் இவ்வுலகில் ஏற்பட இருக்கும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
1. எங்கு பார்த்தாலும் மோசடியே நிறைந்து காணப்படும்
2. அந்த மோசடி நிறைந்த காலம் பல வருடங்கள் நீடித்து நிலை பெற்றிருக்கும்.
3. பகிரங்கமாகவே பொய் பேசக்கூடியவனைக் மக்கள் உண்மை பேசுகிறான் என்று நம்புவார்கள்.
4. உண்மை பேசுபவனை மக்கள் பொய்யன் எனக் கருதுவார்கள்.
5. சதா அனைவருக்கும் மோசடி செய்து கொண்டிருப்பவனை அவன் மோசடிக்காரன் என்று தெரிந்து கொண்டே மக்கள் அவனை நல்லவன் என்று நம்புவார்கள்.
6. நம்பிக்கையாக நடக்கக்கூடிய ஒருவனை மக்கள் சந்தேககண் கொண்டு பார்ப்பார்கள் அவனை நம்ப மறுப்பார்கள்.
7. அப்படிப்பட்டக் காலத்தில் அறிவிலிகள் ஆதிக்கம் செலுத்துவார்கள். எங்கும் எதிலும் அறியாமையே ஆரசோச்சும்.
இந்த நிலையைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம் மேலே நாம் பார்த்த அந்த இரண்டு நபி வழிச் செய்திகளும் முன்னறிவிப்புச் செய்துள்ள அத்தனை அம்சங்களும் நிறைந்ததாகவே இன்றய காலம் காணப்படுகின்றது.
எனவே நம் சமூகம் இவ்வுலகில் தன்னம்பிக்கை மிக்க அச்சமற்ற ஒரு சமூகமாக வாழ வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக இந்த நிலை மாற வேண்டும் மாற்றப்பட வேண்டும். அதற்காக நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முன்னறிவிப்புக்கள் எமக்குச் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே இந்த நிலையை மாற்றி சிறந்ததொரு சூழ்நிலைக்கு உலகைக் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் முஸ்லிம்களாகிய நம்மைச் சாரும் எனவே நாமனைவரும் நமது கடமையை உணர்ந்து செயல்டுவோமாக என அன்புடன் அழைக்கின்றோம்.

0 comments :
Post a Comment