தூரநோக்கோடு சிந்தித்து தம்புள்ளை நகருக்குள் புதிதாய் பள்ளிவாசலொன்றை நிர்மாணிப்பது சிறந்தது. சத்தார்

Share on
தம்புள்ளை பள்ளிவாசல் ஒரு நிரந்தர கட்டிடம் அல்லவெனவும் தம்புள்ளை நகருக்குள் புதிதாய் பள்ளிவாசலை நிர்மாணிப்பது வரவேற்கத்தக்க விடயம் என குருநாகலை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான அப்துல் சத்தார் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் 
அவர் மேலும் தெரிவித்ததாவது, தம்புள்ளை பள்ளிவாசலானது ஒரு நிரந்தர கட்டிடம் அல்ல அமாணா சீட்டுகளினாலேயே அது அமைக்கப்பட்டுள்ளது.அதனை சூழ சில முஸ்லிம் குடும்பங்கள் உள்ளனர்.


 புனித பூமி மற்றும் வீதி அபிவிருத்தி காரணமாக அப்பள்ளிவாசல் அகற்றப்படப் போவது உறுதி.


இந் நிலையில் வறட்டு கெளரவம் மற்றும் பிடிவாதம பிடிப்பது பயனளிக்காது. 


தூரநோக்கோடு சிந்தித்து தம்புள்ளை நகருக்குள் புதிதாய் பள்ளிவாசலொன்றை நிர்மாணிப்பது சிறந்தது.


இது விடயத்தில் திருப்தி காணப்படின் நான் ஜனாதிபதியுடன் பேசி அதனை அமுல்படுத்தத் தயார் என தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :