Life Cities திட்டத்தின் கீழ் கல்முனை அபிவிருத்திக்கு விஷேட ஏற்பாடு; மாநகர சபையில் உயர்மட்டக் கலந்துரையாடல்



அஸ்லம் எஸ்.மௌலானா-

2027 ஆண்டுக்கான பட்ஜெட்டில் 16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் Life Cities எனும் திட்டத்தின் கீழ் கல்முனையும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை கல்முனை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம். ஜுனைதீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், சுற்றாடல் அதிகார சபை, இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பள்ளிவாசல்கள், கோவில்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், கல்வியியலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகரப் பிரதேசங்களின் நிலைபேறான அபிவிருத்தியை மையப்படுத்தி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள கல்முனை நகர அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் மற்றும் வரைபுகள் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகரப் பிரதேசங்கள் அனைத்தையும் நகரமயமாக்கல், அரச கட்டிடத் தொகுதிகளை அமைத்தல், பொதுச் சந்தைகள் மீளமைப்பு, பிரதான வீதிகள் விஸ்தரிப்பு, புதிய நெடுஞ்சாலை அமைத்தல், புகையிரதப் பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், தொடர்மாடி வீட்டுத் திட்டங்களின் மீளமைப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, வடிகாலமைப்புகள், திண்மக்கழிவகற்றல் மற்றும் அனர்த்தப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கிக் கூறப்பட்டது.

இதையடுத்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சபையோரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. கல்முனை மாநகர பொதுச் சந்தையின் மீள் கட்டுமானத் திட்டம், பிரதான வீதி விஸ்தரிப்பு உள்ளிட்ட சில விடயங்களில் வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்டன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் Life Cities திட்டத்திற்கு கல்முனை தெரிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :