கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 04 புதிய பயிற்சி மருத்துவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்



நாட்டின் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு (04) பயிற்சி மருத்துவர்கள் (Intern Medical Officers) இன்று தங்களது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றனர்.

இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. I.L.M. றிபாஸ் அவர்கள் புதிய பயிற்சி மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி, அவர்களின் சேவைக் காலத்திற்கு வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் Dr. A.L. பாறூக், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி Dr. K.L.M. ரயிஸ், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி Dr. M.I.M.S. இர்ஷாத், தாதிய பரிபாலகி Mrs. G. ஜெகதீஸ்வரி, Mrs. A.G.F. ஹினாயா, தலைமை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (Chief MLT) N.L.M. தொளபீக் உள்ளிட்ட வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

புதிய பயிற்சி மருத்துவர்களுக்காக இரண்டு நாள் Orientation Programme நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வைத்தியசாலைப் பிரிவுகளில் பயிற்சிக் கடமைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தரமான, பாதுகாப்பான மற்றும் மனிதநேயமிக்க சுகாதார சேவையை மக்களுக்கு வழங்கும் அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணியில் இணையும் புதிய பயிற்சி மருத்துவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

ஊடகப்பிரிவு
அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :