EFO புதிய முகாமைத்துவ சபை பொறுப்பேற்பு : பணிப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது



யூ.கே. காலித்தீன்-
கிழக்கு நட்புபுறவு ஒன்றியத்தின் (EFO) 2026/2027ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக மற்றும் முகாமைத்துவ சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (16) மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, ஒன்றியத்தின் முதலாவது முகாமைத்துவ சபைக் கூட்டத்துடன் இணைந்து, தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நசீர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள், சமூக முன்னேற்றத் திட்டங்கள் மற்றும் நிர்வாகத் திட்டமிடல்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, 2026/2027ஆம் ஆண்டிற்கான பல்வேறு பொறுப்புகளுக்கான பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

நிர்வாக பணிப்பாளராக ஐ. அலியார் (ஐயூப்), நிதி பணிப்பாளராக ஏ.சி. முகம்மட், திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் பணிப்பாளராக எம்.எம். ஜுனைடீன், கல்வி பணிப்பாளராக பேராசிரியர் ஏ. றமீஸ் மற்றும் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பாடல் பணிப்பாளராக யூ.கே. காலித்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அதேவேளை, சமூக சேவை மற்றும் நலன்புரி பணிப்பாளராக யூ.கே. முஸாஜித் மற்றும் விளையாட்டு, கலை மற்றும் கலாசார பணிப்பாளராக யூ.எல்.ஏ. அலீம் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மேலும், பிரதி தவிசாளராக என்.எம். றிஸ்மிர், பிரதி நிர்வாக பணிப்பாளராக எம்.எம். உதுமாலெப்பை மற்றும் பிரதி நிதிப்பணிப்பாளராக எம்.ஏ.சி.எல். நஜீம் ஆகியோருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.

சபை உறுப்பினர்களாக ஏ.எல்.ஏ. நாபித், யூ.எல்.எம். ஹனீபா, எம்.ஐ. ஜாபீர் மற்றும் எம்.எம்.எம். றபீக் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

அதேபோன்று, ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் மற்றும் முன்னாள் அதிபர் ஐ.கே. ஹசனலி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :