புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தரம் 1 மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு/ அல் - ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கமு/கமு/ அல் - ஹிலால் வித்தியாலயத்தின் புதிய அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார் கலந்து கொண்டு புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக பெற்றோருக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எச். லாபிர், ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி, பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் உட்பட தரம் 1இன் பகுதித் தலைவர் உட்பட தரம் 1 இன் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் 2026இல் தரம் 01 கல்வி கற்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment