இன்றைய (18) தினம் சாய்ந்தமருது கமு/மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் ஸ்மார்ட் வகுப்பறையில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் கலை உயர் பிரிவு மாணவிகளுக்காக புவியியல் பாடத்தின் சிறப்பு இலவச கருத்தரங்கு வெற்றிகரமாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி ரிப்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊக்கமூட்டும் உரையினையும் ஆற்றி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.









0 comments :
Post a Comment