கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் எம்.ஏ.எப். அஸ்பா மற்றும் எஸ்.எப்.எஸ். இமானி எனும் இரு மாணவிகள் கல்முனை கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட வலய மட்ட ஒலிம்பியாட் போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டு மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இம்மாணவிளுக்கும், இம்மாணவிகளை பயிற்றுவித்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்ட பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் மார்ச் 11 ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெறவிருக்கும் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டி தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்கும் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment