சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பாரம்பரியமாக ஓதப்பட்டு வந்த 'புனித புஹாரி செரீப்' பாராயணம் இம்முறையும் ஓதப்பட்டு (01) சனிக்கிழமை மாலை இப்பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி) மற்றும் உலமாக்களினால் தமாம் செய்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையின் பிரதித்தலைவர் எம்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் செயலாளர் எம்.எம்.எம்.றபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொறுப்பாளர் சபையின் பொருளாளர் ஏ.ஏ.சலீம், மற்றும் மரைக்காயர்மார்கள், பொறுப்பாளர்கள், உலமாக்கள், உத்தியோகத்தர்கள், நிர்வாகிகள், ஜமாஅத்தினர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
புனித புஹாரி சரீப் பாராயணம், கடந்த ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, சுமார் ஒரு மாத காலமாக அதிகாலை வேளையில் ஊர் மக்கள், ஜமாஅத்தினர்கள் மற்றும் தனவந்தர்களின் பங்களிப்புடன் ஓதப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment