சம்மாந்துறையைச் சேர்ந்த இருவர் அகில இலங்கை (முழுத்தீவுக்குமான) சமாதான நீதிவானாகவும், நால்வர் மாவட்ட சமாதான நீதிவானாக கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி கௌரவ ஏ.எம்.முஹம்மது றியால் முன்னிலையில் (2025.01.23 , 2025.01.30 ம் திகதி) மாவட்ட சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
முன்னாள் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராதா ஜயரத்ன அவர்களின் சிபாரிசின் கீழ் றிசாத் அன்ட் பிரதர்ஸ் அமைப்பின் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை சமாதான நீதிவானாக இருவரும், மாவட்ட சமாதான நீதிவானாக நால்வரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அகில இலங்கை ( முழுத்தீவுக்குமான) சமாதான நீதிவானாக எம்.எச்.றாசியா உடங்கா 01 ஐச் சேர்ந்தவர். சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தின் ஆசிரியர், அகில இலங்கை (முழுத்தீவுக்குமான) சமாதான நீதிவானாக ஏ.கே. முகம்மட் காலித் உடங்கா 01 ஐச் சேர்ந்தவர். முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர், மாவட்ட சமாதான நீதிவானாக கே.எம். சவூதுன் நஜ்ஜாஸ் கருவாட்டுக்கல் 03 ஐச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற சம்மாந்துறை வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் (சுகாதாரம் உடற்கல்வி) மற்றும் றிசாத் அன்ட் பிரதர்ஸ் அமைப்பின் ஆலோசகர், மாவட்ட சமாதான நீதிவானாக ஏ.எம். சபீக் விளினியடி 03 ஐச் சேர்ந்தவர். கல்முனை பிரதேச செயலக தொழில்நுட்ப உதவி உத்தியோகத்தர், மாவட்ட சமாதான நீதிவானாக எம்.டி. அப்துல் றஹ்மான் கருவாட்டுக்கல் 03 ஐச் சேர்ந்தவர். றிசாத் அன்ட் பிரதர்ஸ் அமைப்பின் உறுப்பினர், மாவட்ட சமாதான நீதிவானாக எஸ். பைசர்கான் சம்மாந்துறை 10 ஐச் சேர்ந்தவர். சம்மாந்துறை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர் போன்றவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment