சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸின் அதிபர் றிப்கா அன்ஸாறை மாலையிட்டு வரவேற்ற பாடசாலை சமூகம்!



சாய்ந்தமருது கமு/கமு/மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபராக அதிபர் சேவை ஒன்றை சேர்ந்த எம்.சி. நஸ்லின் றிப்கா அன்ஸார் கடந்த 2025.02.07 ஆம் திகதி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றிருந்தார்.

பாடசாலைக்கு மீண்டும் அதிபராக வருகைதந்த நஸ்லின் றிப்காவை பாடசாலை சமூகம் மாலையிட்டு வரவேற்ற நிகழ்வு 2025.02.10 ஆம் திகதி இடம்பெற்றது.

 திருமதி எம்.சி.என். ரிப்கா அன்சார்  சாய்ந்தமருது மழ்ஹறுஷ்  ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிபராக பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பாடசாலையின் கல்வி மேம்பாடு மற்றும் பௌதீக வள அபிவிருத்தி ஆகியவற்றை சிறப்பாக முன்னெடுத்திருந்தார். இதனால் பாடசாலை சமூகத்தினரின் வரவேற்பையும் பெற்றிருந்தார்.

இடையில் சிறிது கால இடைவெளியில் பாடசாலையின் அதிபர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும் மீண்டும் கடந்த 07.02.2025 இல் அதிபர் கடமையை பொறுப்பேற்று தான் முன்னெடுத்துச் சென்ற, செல்ல எண்ணி இருந்த விடயங்களை மீண்டும் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்போடும் இறைவனின் உதவியோடும் முன்னெடுப்பார் என்ற உறுதி மொழியை இன்று அவருக்கு பாடசாலையில் ஆசிரியர் குழாத்தினரால் வழங்கப்பட்ட கௌரவிப்பு பறைசாற்றுகின்றது.

பகுதித்தலைவர் எம்.எம். இல்லியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.




























 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :