மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த மக்கள் சேவகன் ஜெமீல் மனம்திறந்தார்.



அன்புக்குரிய என் உடன்பிறப்புக்களே !

மிகவேகமாக சுழலும் கால சக்கரத்தில் உங்களை உங்கள் இடங்களில் வந்து சந்திக்க நான் நினைத்திருந்தும் காலம் இடம்கொடுக்கவில்லை என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். குறுகிய கால இடைவெளியில் நடைபெறும் இந்த தேர்தலில் உங்களை நேரடியாக உங்களின் தொலைபேசி வாயிலாக முகம்பார்த்து பேசும் வாய்ப்பை தொழிநுட்பம் தந்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நாட்டின் அரச இயந்திரத்தை சீராக இயக்கம் நீங்கள் இன்னும் சில நாட்களில் பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க உள்ளீர்கள். மழையிலும், வெயிலிலும் நின்று நாட்டை பாதுகாப்பும் எனது பாதுகாப்பு படை, மற்றும் பொலிஸ் திணைக்கள நண்பர்களே, உலக வரலாற்றை மாற்றியத்துக்கொண்டிருக்கும் ஆசிரிய பெருந்தகைகளே, அரச இயந்திரத்தின் அச்சாணியாக திகழும் அரச உத்தியோகத்தர்களே இம்முறை உங்கள் சகோதரன் ஜெமீலாகிய நான் திகாமடுல்லவில் சிலிண்டர் சின்னம் இலக்கம் மூன்றில் இந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உருவாக்கம் முதல் எமது நாட்டின் கல்வித்துறைக்கு நான் வழங்கிய பங்களிப்புக்களுக்கு நீங்களே சாட்சியாளர்களாக இருக்கிறீர்கள். கடந்து காலங்களில் இரு தடவைகள் கிழக்கு மாகாண சபையில் உங்களின் பிரதிநிதிநிதியாக இருந்து நான் அரச ஊழியர்கள், உத்தியோகத்தர்களின் குரலாக ஒலித்தது மட்டுமின்றி நிறைய உங்களுக்கான சேவைகளை வழங்கியுள்ளேன்.

நாட்டையும், நாட்டு மக்களையும் நிம்மதியாக வாழ வழியமைத்த சிலிண்டர் முன்னணியில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நான் அம்பாறை மாவட்ட மக்களின் குரலாக மட்டுமின்றி இலங்கை மக்களின் குரலாகவும் ஒலிப்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எமது மாவட்ட உட்கட்டமைப்பு, மேம்பாடு, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் நமது புள்ளடியை சரியாக நாம் வழங்குவோம்.

எனது சின்னம் சிலிண்டருக்கும், எனது மூன்றாம் இலக்கத்திட்கும் வாக்களித்து நமது ஒன்றிணைவால் நமது கனவுகளை மெய்ப்பிப்போம். ஏமாற்று அரசியலை ஓரங்கட்ட நமது வாக்குகளை நாம் சிந்தித்து வாக்களிப்போம் !
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :