மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் பரிசளிப்பு விழா : பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/ ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு பாடசாலை அதிபரும், பழைய மாணவர் சங்கத் தலைவருமான எம்.எம் ஹிர்பகான் தலைமையில் ஷம்ஸ் மத்திய கல்லூரி திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபதுல் கரீம், கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.எம்.மர்சூக், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய முன்னாள் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம் அமீர், அல் ஹிக்மா ஜூனியர் வித்தியாலய அதிபர் எம்.எல்.எம் மஹ்ரூப், ஆசிய பெளண்டேசனின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம் வலீத், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ் உமர் அலி, சமட் ஹமீட், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் சப்றாஸ் நிலாம் உட்பட கல்வியாளர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் அரபு எழுத்தணி போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களும் கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :