ஏறாவூர் மட் /அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்த தான நிகழ்வு!ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
றாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் ,மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி பேரவைAC YMMA C ஏறாவூர் கிளை ,மற்றும் பொது சமூக சேவை அமைப்பு PSSO என்பன இணைந்த அதன் ஏற்பாட்டில் சனிக்கிழமை 18/05/2024. இன்று காலை 08/30 _பி.பகல் 04-00 மணிவரை ஏறாவூர் மட் /அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் இரத்த தான நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் Dr.ரேச்சல் டி சில்வா அவர்களின் மேற்பார்வையில் BMM.பைசல்( PHI) இரத்த வங்கி பிரிவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வழிகாட்டலில் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இரத்தம் தட்டுப்பாடு காரணமாக, நோயாளர்களின் அவசர தேவை கருதி இரத்தவங்கி பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி பேரவை AC YMMA C ஏறாவூர் கிளை தலைவர் MFM.பாறூக் தலைமையில் Dr.சாபிறா வஸீம்(MOH)ஏறாவூர், SAC.நஜீமுத்தீன் சமூக சேவை உத்தியோகத்தர், ALM.பாறூக் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி பேரவைAC YMMA C மாவட்டப் பணிப்பாளர் , மௌலவி SH.சபூர்தீன் ARM.ஆதில்(PHI) மற்றும் உறுப்பிணர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :