மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம் : அபிவிருத்தி பணிகளுக்காக நிதியும் ஒதுக்கினார் !நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்தியத்தில் மட்டுமன்றி தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற மருதமுனை கமு/கமு/ அல்- மனார் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஜயம் செய்து பாடசாலையின் கல்வி அடைவு மட்டங்கள், பௌதீக மற்றும் ஆளணி விடயங்கள், கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
கல்லூரி முதல்வர் ஐ. உபைதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எம்.எம். அனஸ், ரஸ்மி மூஸா, உதவி அதிபர் எம்.எஸ். நிஹால், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் ரீ. றிஹான் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு பாடசாலையின் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் கலந்துரையாடினர்.
இதன்போது மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி மேம்பாட்டுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை பாடசாலை அதிபர் ஐ. உபைதுல்லாஹ் விடமும், பெண்கள் பிரிவின் கடிதத்தை பிரதி அதிபர் எம்.எம். அனஸ் அவர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசலின் நிதி ஒதுக்கீட்டு கடிதத்தையும் பள்ளிவாசல் பொருளாளர் எஸ்.எம். றபாயிடீனிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். ஹாரீஸ் (நவாஸ்), பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :