வடமேல் மாகாண அதிபர், ஆசிரியர் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்க ஆளுனர் நஸீர் அஹமட் பணிப்புரை



எம்.எம்.ஜெஸ்மின்-
டமேல் மாகாணத்தில் காணப்படும் அதிபர், ஆசிரியர் பிரச்சினைகளை எதிர்வரும் ஜூன் 30ம் திகதிக்கு முன்னதாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுனர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 14ம் திகதி வடமேல் மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது..

வடமேல் மாகாணத்தில் நிலவும் அதிபர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது குறித்தும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதன் போது மாகாண மட்டத்தில் அதிபர் இடமாற்றம் குறித்த பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருப்பதை ஆளுனர் அவதானித்தார். அதனையடுத்து அதிபர் இடமாற்றங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனரின் செயலாளர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கு ஆளுனர் பணிப்புரை விடுத்தார். இதன் போது கருத்து தெரிவித்த ஆளுனரின் செயலாளர், அதிபர் இடமாற்றங்கள் தொடர்பான விபரங்களை இணையத்தளம் ஊடாக விரைவில் வௌியிட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

இதன் போது ஒரே பாடசாலையில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கடமையாற்றுவோர், கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்குமாறு கௌரவ ஆளுனர் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் ஏனைய மாகாணங்களில் இருந்து வடமேல் மாகாணத்தில் கடமைபுரிவோரை துரிதமாக சொந்த மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனையடுத்து, மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கும் நிலையில் குறித்த விடயத்தில் இனியும் தாமதம் செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஆளுனர் உறுதியளித்துள்ளார்.

எதிர்கால சந்ததியை வலுப்படுத்தும் வகையில் மாகாண மட்டத்திலான கல்வி நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, குறைபாடுகளைக் களைந்து, கல்வி அபிவிருத்திக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது ஆதரவை வழங்குவதாகவும் கௌரவ ஆளுனர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலில் வடமேல் மாகாண பிரதம செயலாளர், ஆளுனரின் செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், வடமேல் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், வடமேல் மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :