சமூக பிரச்னை சார்ந்த தமிழ் திரைப்படம் பெட்டர் டுமாரோ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது



மூக செய்தியுடன் கூடிய தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் படக்குழுவினர் வெளியிட்டனர் இயக்குனர் ஷர்வியும், மானவும் மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணைந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. 125+ விருதுகளையும் பாராட்டுக்களையும் வென்ற அவர்களின் முதல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட டூ ஓவர் திரைப்படத்திற்குப் பிறகு குழு மீண்டும் இணைந்துள்ளது. 

ஷார்வி இயக்கத்தில் பிரேர்னா பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பேனரில் ஷைலேந்திர சுக்லா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பிஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்ய, ஈஸ்வரமூர்த்தி குமார் படத்தொகுப்பாளராகவும், குமாரசாமி பிரபாகரன் இசையமைப்பாளராகவும், சரவணன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கௌரி கோபன் கதாநாயகியாக நடிக்க, பாய்ஸ் ராஜன், ஜகதீஷ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, ஆர்.ஜி. வெங்கடேஷ், சரவணன், திவ்யா சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்தது, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :