நாவிதன்வெளியில் சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை
ஏ.எல்.எம்.ஷினாஸ்-
நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை நாவிதன்வெளி பிரதேச செயலக திறந்த வெளியில் (09) நடைபெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் பிரதேச செயலகங்கள் ரீதியாக ‘சமுர்த்தி அபிமானி’ புத்தாண்டு சந்தையினை நடத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எஸ்.சிவம் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு சந்தை ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா உட்பட சமூர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதிதிகள் வியாபார நிலையங்களை திறந்து வைத்ததுடன். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் பார்வையிட்டனர். இங்கு கிராம மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :